கட்சியின் எந்த ஒரு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டிய நிலையில்

முன்னாள் அமைச்சர் முனுசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஒ.எஸ் மணியன் பதில் கூறியதாவது திவாகரன் கூறிய கருத்து எவ்வித தவறும் கிடையாது 

அவர் கட்சியை உடைக்க நினைப்பவர்கள் மத்தியில் கட்சியை காப்பாற்ற அவர் கருத்து கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமர்வதற்கு முன்பு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலை ஏற்பட்டது.அந்த காலக்கட்டத்தில் ஜெ அணி தொடங்கப்பட்டது. நாடு முழுக்க அவர் தொடர் பிரச்சாரம் செய்தார். காலை முதல் இரவு வரை அயராது பாடுபட்டார். சென்ற இடமெல்லாம் கட்சி கொடியும், குழந்தைகளுக்கு பெயர் வைப்பார், அப்போது அவரின் முழு பாதுகாப்பிற்கு ஒரு குழுவை திவாகரன் செய்து வந்தார்.

அந்த சமயத்தில் தலைமை கழகம் கைப்பற்ற முன்னேற்ற போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றவர்களால் தாக்கப்பட்டார்.அப்போது திவாகரன் குழு பாதுகாத்து காப்பாற்றினார் அப்போது திவாகரன் தாக்கப்பட்டு காயமடைந்தார். ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு பக்க பலமாக இருந்தவர்.

1991ம் ஆண்டு முதல்வர் பொறுப்பு ஏற்கும் வரை எந்த அளவுக்கு மறைக்கமால் கூற முடியாது, உண்மை சகோதரி சகிகலா உடன் இருந்தார்.

அவரின் மறைவுக்கு பின்பு முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி ஏற்க எல்லோரும் அழைத்த போது வற்புறுத்திய போதிலும் அவர் முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். 

நான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டேன். அப்போது கட்சி மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக செயல்பட்டது கிடையாது, அப்போது கட்சியின் பிரச்சனை ஏற்பட்ட போதிலும் கட்சியின் எதிராக குரல் கொடுத்தேன். என்னுடைய நண்பர் முனுசாமி என்ற முறையில் கூறுகிறேன்.

கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.முனுசாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 99.9 சதவீதம் பேர் வந்துள்ளார் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் வந்தனர்,முனுசாமி கட்சியின் பொறுப்பில் இல்லாதால் அவரால் பங்கேற்க முடியவில்லை, கட்சி குறித்து கருத்து இருந்தால் பொதுச்செயலாளர் அல்லது தலைமை கழகத்தில் புகார் அளிக்கலாம் அதனை விட்டு தனியாக குறைகூறுவது அழகு அல்ல, தற்போது அவரின் செயல் யாரிடம் விலைக்கு போய் விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. 

கட்சியின் கட்டுபாடு கண்ணியத்திற்கு கட்சி கோட்பாடு எதிர்களிடம் காப்பாற்ற வேண்டும் என்பதை திவகாரன் கூறியது எவ்வித தவறும் கிடையாது

எம்.ஜி,ஆர் கூறியதை நான் நினைவு கூறுகிறேன். அதிமுகவில் யார் பொதுச்செயலாளராக இருப்பவர் முதல்வராக இருப்பார் என கூறினார். அதே கூறிய நாங்கள் அழைத்த போது சகிகலா ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.