48 வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில், ’’எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar" என அவர் தெரிவித்துள்ளார். 

 

ஜெயலலிதாவுக்கு அஜித், ஷாலினி மீது அக்கறை உண்டு. ஜெயலலிதா மறைந்தபோது, அஜித் சென்னையில் இல்லை. வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிகாலை சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித்தின் திரையுலக போட்டியாளராக ரசிகர்களால் கருதப்படும், விஜய்க்கும், அதிமுகவுக்கும், தலைவா திரைப்படம் ரிலீஸ் காலத்தில் இருந்தே பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. 

சர்கார் படத்தில் ஜெயலலிதாவை நெகட்டிவ்வாக காட்டியதால் அதிமுகவின் பகையை மேலும் சம்பாதித்தார் விஜய். இந்நிலையில் ஓ.பி.எஸ் அஜித்தை பாராட்டியதில் ’எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னேறிய’ எனக் கூறி இருப்பது விஜயை சுட்டிக் காட்டியே ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.