Asianet News TamilAsianet News Tamil

உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

O Panneerselvam slams Edappadi palanisamy
Author
First Published Dec 21, 2022, 5:13 PM IST

முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அதிமுகவில் இப்பொழுது நிலவக்கூடிய இந்த சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தமிழக மக்களும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் நன்றாக அறிவார்கள்.

அதிமுக தொண்டர்களை இணைக்கக்கூடிய ஒன்றிணைக்க கூடிய முயற்சியில் இன்று ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். தொண்டர்களும்,  பொதுமக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் குறித்த சூழல் இன்னும் உருவாகவில்லை. அப்படி உருவானால் எம்ஜிஆர்,  ஜெயலலிதா எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ அந்த நிலையில் கட்சியை ஆட்சி பறிபோகாமல் காப்போம்.

O Panneerselvam slams Edappadi palanisamy

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

நான் பொருளாளராக இருக்கும்பொழுது அளித்த கணக்கை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி ஒன்று உண்டெனில் அது எடப்பாடி பழனிச்சாமி தான். தமிழகத்தில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி ஆகவேதான் எங்கள் தலைமையில் கூட்டணி அமையும் என்று நான் பேசி இருக்கிறேன்.

தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்குகின்ற தீர்ப்பின்படி  இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். இவரால் மாவட்ட செயலாளராக நியமிக்க முடிவு நியமிக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு தற்போது 88 மாவட்ட செயலாளர்களையும் கழக நிர்வாகிகளையும் நியமித்து உள்ளேன் போட்டி பொதுக்குழு என்று எதுவும் இல்லை பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும் அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

சசிகலாவுடன் மீண்டும் இனைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இயக்கத்தை காப்பாற்றியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து செய்யல்படுவோம். கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் நம்பிக்கை அதிமுக 1.5 கோடி தொண்டர்கள் தான். அவர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க..அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்.. ரபேல் விமான பாகத்தில் செய்யலையா.? உண்மை இதுதான் மக்களே !

அதிமுக வரலாற்றில் இது போன்ற கேவலமான ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இல்லை. அதிமுகவை பாஜக விழுங்குகிறது என்ற கேள்விக்கு, யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது. எனக்கு குஜராத்தில் உரிய மரியாதை தரப்பட்டது. முதலில் நான் பின் வரிசையில் அமர்ந்திருந்தேன்..பிறகு மேடையில் முன் வரிசையில் என்னை அழைத்து சென்று அமர வைத்தார்கள்.

அமித்ஷா where is OPS என்று கேட்டார்.பின்பு தான் நான் சென்று அவரை பார்த்து பேசினேன். எங்களுக்கு பாஜக உரிய மரியாதையை தருகிறது. நாங்களும் அவர்களுக்கு உரிய மரியாதையை தந்து கொண்டு தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் G20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு  விடுத்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது அது எங்களுக்கு தான் சொந்தம் என்று அதிரடியாக பேசியுள்ளார் ஓபிஎஸ்.

இதையும் படிங்க..டிசம்பர் 24 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Follow Us:
Download App:
  • android
  • ios