ரேஷன்கடை முறைகேடு குறித்து தட்டிக்கேட்ட நுகர்வோர் அமைப்பாளரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மிரட்டும் ஆடியோ, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெரியகுளம் நகர தலைவரான துரையை செல்போனில் ஓ.ராஜா அழைத்து மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் ஓ.ராஜா, 

ஓ.ராஜா: தம்பி.. ரேஷன் கடைகளுக்குச் சென்று ஊழியர்களை மிரட்டி வருகிறாய்..

துரை: நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடு குறித்து கேட்டேன். உங்களுக்கும் (ஓ.ராஜா) பங்கு கொடுக்கிறோம் என்று ரேஷன் ஊழியர்கள் சொல்கிறார்கள்’’

ஓ.ராஜா:மீட்டிங் போடுவதற்கு கட்சியில் 1 லட்சம் செலவாகிறது. அதுகுறித்து கேட்க முடியாது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆமாம். எனக்கும் பங்கு வரத்தான் செய்யும். நாங்கள் அரசியல்வாதிகள். ஓட்டுக்கு 500 கொடுக்கணும்ல. சும்மா இருக்க முடியுமா? அப்படித்தான் செய்வோம். கொள்ளையடிக்காமல் இந்த ராஜா காரில் போக முடியுமா? நீ உன் வேலையை பாரு. வண்டி ஓட்டி உன் பொண்டாட்டி, பிள்ளைகளை பார்த்துக்கொள். அல்லது டெல்லி சென்று அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்து.

ரேஷன் கடைகளுக்குச் சென்று மிரட்டி வந்தால் ஸ்டேஷனில் உன் பெயர் தப்பாக பதிவாகி விடும். அப்புறம் ரொம்ப சிரமப்படுவாய். உன் வேலையை மட்டும் பாரு. மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

துரை: நான் இந்த முறைகேடு குறித்து ரவி அண்ணனிடம் (ஓபிஎஸ்சின் மகன்) கூறினேன். அவர் கண்டிப்பதாக கூறினார்.

ஓ.ராஜா: அதை ரவி பார்த்துக் கொள்வார்... என்று முடிகிறது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.