கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 1.17 லட்சம் பேர் கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 4 ,862 லிருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை வைத்து, அந்த மாணவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி மறைமலை அடிகள் தெருவில் உள்ள சென்ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும் பள்ளி நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென் ஜோசப் பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் சுகாதாரத்துறை சார்பில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அந்த பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் அந்த பள்ளியில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை வைத்து மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர். பொதுத்தேர்வு காரணம்காட்டி 10, 11, 12ஆம் மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே பள்ளியில் 27 மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 1.17 லட்சம் பேர் கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 4 ,862 லிருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றாடம் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இரவு நேர உடரங்கு மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் 80க்கும் அதிகமான மாணவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அந்த மாணவர்கள் அங்கு உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் 27 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நிலைமை மோசமாக வருகிறது என்பதையே காட்டுகிறது.
