Nutrino Research Staion should be constructed

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் திட்டமிட்டபடி அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தின் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 1500 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் 1,300 ஆழத்தில் குகை அமாக்கப்பட்டு ஆய்வகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்தச் சூழலில் தேனி நியூட்ரினோ ஆய்வகம் குறித்து மக்களவையில் அணு சக்தி துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்பித்தார். அதில், “ தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாததால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நியூட்ரினோ ஆய்வம் அமைக்கப்படும்” இவ்வாறு ஜித்தேந்திர சிங் தனது விளக்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.