Seeman : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று அவரே கூறுகிறார். கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் சொன்னால் சென்னை கமிஷனரோ, 10 கொலை தான் நடந்துள்ளது என்கிறார். 

வேர்ச்சொல் பேரறிஞர் தக்கார் மசோ விக்டர் ஐயாவின் ஆவணப்படம் இயக்குநர் பாலா எல்-யாவால் இயக்கப்பட்டு வெளிவந்துள்ளது. 30 நிமிடம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் எல்-யா வலையொளியில் வெளியாகியுள்ளது. மேலும் சர்வதேச ஆவணப்பட விழாக்களுக்கு அனுப்பவும் படக்குழு தீர்மானித்துள்ளது. மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். 

பிறகு செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் சட்ட ஒழுங்கு யார் கையில் வைத்திருக்கிறார்கள் அவரிடம் தான் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என கேள்வி கேட்கவேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று அவரே கூறுகிறார். கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் சொன்னால் சென்னை கமிஷனரோ, 10 கொலை தான் நடந்துள்ளது என்கிறார். 

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

ஒரு கொலை நடந்தாலும் அது கொலை தான். மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்வது ? அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார்; அவர் அரசியல் பேசுவதில் என்ன தப்பு? மதுரை ஆதீனம் ஒரு தமிழ் தேசியவாதி. தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்த பலர் விரும்புகிறார்கள். அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் மேலும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்க விரும்பவில்லை முதன்மையாக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

YouTube video player

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது வைக்கின்ற ஊழல் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த அதிமுகவின் ஊழல் பட்டியலை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை ? என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?