Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள்.. திமுக பரம்பரை திருடர்கள்.. 2 திராவிட கட்சிகளையும் வம்புக்கு இழுக்கும் சீமான்

Seeman : நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பேசி நாட்டைத் துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பாஜக அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

Ntk co ordinator seeeman speech aganis dmk and aiadmk both two parys are corruption
Author
First Published Jun 11, 2022, 10:37 PM IST

திருநெல்வேலியில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், தமிழ் தேசிய அரசியலை விதைத்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறோம். 

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பேசி நாட்டைத் துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பாஜக அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா ?. இங்கு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தான் பகை. இதற்கு இடையில் திராவிடம் என்பது போலி ஆக இருக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுகிறார். 

Ntk co ordinator seeeman speech aganis dmk and aiadmk both two parys are corruption

ஊழலைப் பற்றி பேசுபவர், எதற்காக ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைத்து உள்ளார். ஊழல் கட்சிகளின் தலைவர் சிலையை திறந்து வைப்பதற்கு ஏன் துணை குடியரசுத் தலைவர் வரவேண்டும் ?  பாஜக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா ? உள்ளாட்சி தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பாஜக ஆகும். அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள் என்றால், திமுக பரம்பரை திருடர்கள். 

ஆதினங்களை பல்லக்கில் வைத்து தூக்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அது காலம் காலமாக உள்ள சம்பிரதாயம் என்பதால், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப நவீன எந்திரங்கள் கொண்டு இழுக்கலாம். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது’ என்று மிகவும் காட்டமாக பேசினார் சீமான்.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13 தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios