மக்களவையில் கடந்த வியாழக்கிழமை முத்தலாக் மசோதா நிறைவேறிய நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தனது ட்வீட்டில் ‘‘ஏற்றுக் கொள்ள முடியாத ஆதி கால செயல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு நிகழ்ந்த அநீதி முத்தலாக் சட்டம் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவும். முத்தலாக் மசோதா வெற்றி பாலின நீதிக்கானது. சமூகத்தில் மேலும் சமத்துவத்தை ஏற்படுத்தும்.

மசோதாவை ஆதரித்த கட்சிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி. ஆதரித்து வாக்களித்தவர்களின் செயல் காலத்திற்கும் நினைவில் நிற்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.