ஹிந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று, நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல.. பல ஆண்டுகளாகவே இரு்ந்து வருகிறது. இந்த சூழலில் சமீப காலமாகவே ஹிந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி, திமுக எம்.பி கனிமொழியிடம், ஹிந்தி தெரியாது என்று சொன்னதற்கு இந்தியரா என்று கேட்டது, ஹிந்தி தெரியாதவர்கள் யோகா வகுப்பில் இருந்து வெளியேறலாம் என்று மத்திய அரசு அதிகாரி கூறியது ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் ஹிந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டேன் என்று சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக, தமிழ் திரைப் பிரபலங்கள், i am a தமிழ் பேசும் indian, ஹிந்தி தெரியாது போட்டா போன்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்டுகளை அணிந்து, #இந்திதெரியாதுபோடா என்ற ஹேஷடாகை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக ஆதரவாளர்கள் திமுகவேணாம்போடா என்ற ஹேஷ்டாகை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

 

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து வெளியான மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் ‘வர வர மக்கள் கிரியேட்டிவா மாறிக் கொண்டு வருகின்றனர்’என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் சட்டை கழற்றிக் கொண்டு வருவது போல அந்த புகைப்படத்தி, ஆக, கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், தமிழ், ஆங்கிலம் தெரியாது போடா” என்று குறிப்பிட்டுள்ளது. ஹெச்.ராஜாவின் இப்பதிவுக்கு ட்விட்டரில் பலரும் பதிலளித்து வருகின்றனர்.