Nobody should speak anything about dinakaran - by edappadi
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை யாரும் விமரிசிக்க வேண்டாம் என அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி,டி,வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்தையடுத்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் , டி.டி.வி.தினகரன் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தினகரனின் ஆதரவாளர்களும் தக்கபதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து அதிமுக அம்மா அணியில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 32 எம்எல்ஏக்கள் தினகரனை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த போக்கு தொடர்ந்தால் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் எடப்பாடி தரப்பினர் தவித்து வருகின்றனர் .
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி அமைச்சர்கள் யாரும் தினகரனை விமர்சித்து கருத்துகள் தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட யாரும் தினகரனுக்கு எதிரான கருத்துகளை இனி தெரிவிக்க மாட்டார்கள் என்றும், இதனால் தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான கருத்து மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
