Asianet News TamilAsianet News Tamil

மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு இது கட் !! பாபா ராம்தேவின் பலே ஐடியா !!

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு வாக்குரிமை அளிக்கக்கூடாது என பிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவ் பலே ஐடியா கொடுத்துள்ளார்.
 

no vote for third child
Author
Delhi, First Published May 28, 2019, 9:20 AM IST

இந்தியாவில் யாராவது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை பறித்துவிட வேண்டும்” என்று சாமியார் ராம் தேவ், கடந்த 2018 செப்டம்பர் மாதம் ஹரித்துவாரில் நமைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசினார்.

மேலும் நாட்டில் எங்களை (ராம்தேவ்) போன்று திருமணம் செய்து கொள்ளாமல் ‘பிரம்மச்சாரி’யாக இருப்பவர்களை அரசாங்கமே கௌரவப்படுத்தி; சிறப்புச் சலுகைகளை அளிக்க வேண்டும்” என்றும் அதிரடியாக தெரிவித்தார்.

no vote for third child

இந்நிலையில் இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு வாக்குரிமை அளிக்கக்கூடாது” என்று புதிய கருத்தை வைத்துள்ளார்.

no vote for third child
இதில் விஷேசம் என்னவென்றால், முன்பு, 3 குழந்தை பெற்றவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்ற ராம்தேவ், தற்போது 3-ஆவதாக பிறக்கும் குழந்தைகளுக்கே வாக்குரிமை தரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

no vote for third child

இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகள் பெறுவதாகவும், அதனால் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரித்து, இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துகொண்டே போவதாகவும் நீண்டகாலமாக சங்-பரிவாரங்கள் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இதனை மனத்தில் வைத்தே ராம்தேவும் பேசியுள்ளார் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios