ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத் தேர்லில் போட்டியிடும் அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த டி.டி.வி.தினகரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுகவுக்கும் அமமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
.
அதே நேரத்தல் அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் அதற்கு அமமுக ஆதரவு அளிக்கும் என்று குறிப்பிட்டார். முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரோ புரட்சி பெருந்தகை என பட்டம் கொடுத்திருக்கிறார்களாம், ஆனால் அவருக்கு புரட்சிப் பெருந்தொகை என்று பட்டம் அளித்திருக்கலாம் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதம் ஏற்கதக்கதல்ல. அனைத்து மதமும் அன்பைத்தான் கற்பிக்கிறது. எந்த மதமும் தீவிரவாதத்தில் ஈடுபடுங்கள் என்று யாரையும் கூறுவதில்லை. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இதனால் அமமுகவுக்கும் திமுகவுக்கும் தொடர்பிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் திமுகவுக்கும் , அமமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தினகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.