Asianet News TamilAsianet News Tamil

ராஜினாமா வேண்டாமே சார் !! ராகுலிடம் வலியுறுத்திய ஸ்டாலின் !!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதால், பதவியில் இருந்து விலகும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

no resignation ragulji told  stalin
Author
Chennai, First Published May 28, 2019, 9:00 PM IST

மக்களவைத் தேர்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.  கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வென்றது. மினி மக்களவைத் தேர்தல் என்று கூறப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 17ஆவது மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கட்சி வட்டாரத்தில் ஏற்பட்டது.

no resignation ragulji told  stalin
 
ஆனால் அதற்கு மாறாக தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். இந்நிலையில் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவித்தாக கூறப்படுகிறது.

அதன்படி ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி ஈடுபட்டிருக்கிறார்.

 

no resignation ragulji told  stalinஇதற்காக இன்று ராகுல் காந்தி வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து , ராஜினாமா முடிவைக் கைவிட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். சச்சின் பைலட், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக கூறுவது தற்கொலைக்கு  சமம் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ் செய்திருந்தார்.

no resignation ragulji told  stalin
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும், மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள். எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

no resignation ragulji told  stalin

இதனிடையே திமுகவின் வெற்றிக்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios