Asianet News TamilAsianet News Tamil

நோ மேக்கப்..! நோ பிரஸ் மீட்..! ஸ்டாலின் செம அப்செட்..!

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறி விடும் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ஆசையில் மண் விழுந்த அதிர்ச்சியிலிருந்து ஸ்டாலின் தற்போது வரை மீளவில்லை.

no press meet... MK Stalin upset
Author
Tamil Nadu, First Published May 1, 2019, 9:22 AM IST

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறி விடும் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ஆசையில் மண் விழுந்த அதிர்ச்சியிலிருந்து ஸ்டாலின் தற்போது வரை மீளவில்லை.

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதுதான் ஸ்டாலினின் உறுதியான கணக்கு. மக்கள் அதிருப்தியில் இருப்பதால் 22 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியை அமைத்து விடலாம் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்திலும் கூட இதையே தான் ஸ்டாலின் கூறி வந்தார். no press meet... MK Stalin upset

கலைஞர் பிறந்த நாளன்று தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாறி இருக்கும் என்றும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும் என்றும் ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி நீக்கம் எனும் பிரம்மாஸ்திரம் மூலமாக ஸ்டாலினின் கனவை நனவாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் இடைத்தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றால் எம்எல்ஏக்கள் 5 பேரை ராஜினாமா செய்ய வைக்கும் யோசனையில் கூட எடப்பாடி இருப்பதாக சொல்கிறார்கள். no press meet... MK Stalin upset

இப்படி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எடப்பாடி குறுக்கு வழியை பின்பற்றுவதால் ஸ்டாலின் மிகவும் அப்செட்டில் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுடன் சுமூக உறவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என திமுக முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே ஸ்டாலின் டென்ஷனாக இருந்து வருகிறார். no press meet... MK Stalin upset

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரத்திற்கு புறப்பட்ட ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதேபோல் வழக்கமான மேக்கப் இல்லாமல் மிகவும் இயல்பான முகத்துடன் ஸ்டாலின் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். இதற்கெல்லாம் ஆட்சி மாறாது என்று கூறப்படும் யூகங்கள் தான் காரணம் என்று கூறிக்கொள்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios