No permission to entre the president house to ramnath
ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் அனுமதி மறுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த்….பெர்மிஷன் வாங்கி வருமாறு திருப்பி அனுப்பப்பட்டார்…
குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்துக்கு, சில நாட்களுக்கு முன், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் ஓய்வு பங்களாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
வரும் 17 ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் ராம்நாத்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ராம்நாத் கடந்த மாத இறுதியில், தன் குடும்பத்தாருடன் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
தன் மனைவியை மட்டும், அரசு வழங்கியுள்ள காரில், அவர் அழைத்துச் சென்றார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வாடகைக் காரில் சென்றனர். சிம்லாவின் பல்வேறு இடங்களை அவர்கள் சுற்றி பார்த்தனர்.
அப்போது, ஜனாதிபதி வரும்போது தங்கும், 'ரிடிரீட்' என்ற ஓய்வு பங்களாவையும் சுற்றிப் பார்க்க விரும்பியுள்ளார். ஆனால், முன் அனுமதி பெறாததால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ராம்நாத் தனது குடும்பத்தினருடன் அந்த மாளிகையை பார்க்காமல் திரும்பிச் சென்றார்.
