Asianet News TamilAsianet News Tamil

எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு ! காவி நிறத்தில் பாஸ்போர்ட் இல்லை !!

No passport in Orange colour
No passport in Orange colour
Author
First Published Jan 30, 2018, 9:53 PM IST


காவி நிறத்தில் இனி பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து,

வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக ஆரஞ்சு வண்ணத்துடன், இறுதி பக்கத்தில் முகவரி விபரங்கள் இல்லாத புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினித் தகவல் தரவில் சேமிக்கப்பட்டு உள்ளது, எனவே சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

No passport in Orange colour

 எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல இப்போது நீல நிறத்தில் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறத்தினை காவி நிறமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் தெரிவித்தார்.

 மத்திய அரசு பாஸ்போர்ட் நிறத்தை ஆரஞ்சு நிறமாக மாற்ற முயற்சி செய்கிறது என்ற நகர்வு கடும் விமர்சனத்திற்கு வெளியாகியது.

No passport in Orange colour

இசிஆர் பாஸ்போர்ட் உபயோகிப்பவர்களுக்கு விரைவில் காவி  வண்ண பாஸ்போர்ட் வழங்கப்படும் என்பதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் விடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் முகவரி இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட்டு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது  வழங்கப்படுவது போன்று பாஸ்போர்ட் தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது, கடைசி பகுதியில் முகவரி இடம்பெற்று இருக்கும். இசிஆர் பாஸ்போர்ட் உபயோகிப்பவர்களுக்கு தனியாக ஆரஞ்சு நிறுத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios