Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு போன்று எந்த மாநிலமும் இப்படியொரு பொருளாதார சரிவை சந்தித்ததில்லை.. பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி.!

தமிழகத்தில் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது. டான்ஜெட்கோ, போக்குவரத்து கழகங்கள் கடன்பெற ரூ.91,000 கோடிக்கு கடன்பெற உத்தரவாதம் தந்தது. தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்கறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது. 

No other state like Tamil Nadu has experienced such an economic downturn... minister Palanivel Thiyagarajan
Author
Chennai, First Published Aug 9, 2021, 12:33 PM IST

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக நிதிநிலை தொடர்பான 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை கொண்ட அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்;- முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். அதிமுக ஆட்சிக் காலத்தில், முதல்வரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்களும் இடபெற்றுள்ளன.  ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெளியிட்ட  வெள்ளை அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன. 2001ல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் ஆய்வு செய்தோம். அதில் துறை ரீதியாக தகவல் எதுவும் இல்லை. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் துறை ரீதியாக தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றார்.No other state like Tamil Nadu has experienced such an economic downturn... minister Palanivel Thiyagarajan

இந்தியாவில் வேறெந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததை போன்ற பொருளாதர சரிவை சந்திக்கவில்லை. கொரோனா தொற்று வருவதற்கு முன்பே வருவாய் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம். அதிமுகவின் கையாளாகாத் தனத்தால், ஊழல் நிறைந்த ஆட்சியால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,69,976.00 கடன் சுமத்தப்பட்டுள்ளது.

No other state like Tamil Nadu has experienced such an economic downturn... minister Palanivel Thiyagarajan

தமிழகத்தில் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது. டான்ஜெட்கோ, போக்குவரத்து கழகங்கள் கடன்பெற ரூ.91,000 கோடிக்கு கடன்பெற உத்தரவாதம் தந்தது. தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்கறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 2011 16ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் 2016 21ல் வருவாய் பற்றாக்குறை ரூ.1,50 லட்சம் கோடியாக உயர்ந்தது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios