இந்திய நாடு போல வேறு எந்த நாடும் மாணவர்களை உக்ரேனில் இருந்து மீட்டுவரவில்லை. மார்தட்டும் ஜி.கே வாசன்.

ஆனால் இந்தியா மட்டும் போருக்கு இடையிலும் தூதரகத்தை திறந்துவைத்து, மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்டு வருகிறது

 

No other country has rescued students from Ukraine like India. GK Vasan proud.

நம் இந்தியாவை போல வேறு எந்த நாடும் உக்ரேனில் இருந்து தங்கள் குடிமக்களை இந்த அளவுக்கு மீட்டு வரவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார். மத்திய அரசின் முயற்சியால் இதுவரை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாய்நாடு வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனில் இருந்து நாள்தோறும் விமானம் மூலம் மாணவர்கள் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த 10 தினங்களுக்கு மேலாக கடுமையான போர் நடந்து வருகிறது. துவக்கத்தில் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திய ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. பல்வேறு நாடுகளை  சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் தங்கி பயின்று வரும் நிலையில் போர் காரணமாக அவர்கள் தப்பிப் பிழைக்க போராடி வருகின்றனர். பல நாடுகள் தங்களது தூதரகங்களை மூடிவிட்டு சொந்த நாட்டு குடிமக்களை தவிக்கவிட்டு சென்றுள்ளன. ஆனால் இந்தியா மட்டும் போருக்கு இடையிலும் தூதரகத்தை திறந்துவைத்து, மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் ; ஆளுநர் ஆர்.என் ரவியை எச்சரித்த Dr.ராமதாஸ்.. பழைய பார்முக்கு வந்த பாமக.. ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்து அசத்தல்.

No other country has rescued students from Ukraine like India. GK Vasan proud.

இந்தியாவின் இந்த துணிச்சலான மீட்பு பணியினை பல்வேறு நாடுகளும் வியந்து பாராட்டி வருகின்றன. போருக்கு மத்தியிலும் இந்தியாவின் மீட்புப்பணிகள் கனகச்சிதமாக நடந்து வருவதே இதற்கு காரணம் ஆகும்.  இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட  ஜி.கே வாசன் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையிலும் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றார்.

No other country has rescued students from Ukraine like India. GK Vasan proud.

இதையும் படியுங்கள் ; வழக்குமேல் வழக்கு.. சிக்கி சின்னாபின்னமாகும் ஜெயக்குமார்.. ஜாமின் பெற போராடும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு.

முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், குடும்பத்  தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும், அந்த உதவு பெண்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழக அரசிடமிருந்து அவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள். திமுகவின் 11மாத ஆட்சியில் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு செயல்பாடுகள் இல்லை, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்பது குறைவு, ஆனால் விளம்பரம் அதிகம், ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ரஷ்யாவுடன் போர் என்பது தேவையற்றது என தெரிவித்த அவர், இதுவரை நம் இந்திய நாடு போல வேறு எந்த நாடும் மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்கவில்லை என அவர் கூறியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios