எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்ட முடியாது அசைக்கவும் முடியாது.. மார்தட்டும் எடப்பாடி பழனிச்சாமி.
எந்தக் கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுகவை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எந்தக் கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுகவை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என்றும் விரைவில் வெற்றி கொடி நாட்டுவோம் என்றும் அதுதான் எனது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயங்கர களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன், நிரந்தர பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா என்ற தீர்மானமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நினைத்ததுபோலவே அதிமுகவின் பொதுச் செயலாளர் இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றியுள்ளார். இதற்கிடையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் அதிமுக அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளித்தன.
இதையும் படியுங்கள்: எடப்பாடி பழனிசாமி ,கேபி முனுசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்...! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்
இதனையொட்டி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து அதற்கு ஆதரவளித்தனர். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசியதாவது:-
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்... அதிமுக அலுவலகத்தில் கேவலமான வேலை செய்யலாமா.?? பன்னீரை டார் டாரா கிழித்த கே.பி முனுசாமி.
அதிமுகவை வெற்றி பெற வைக்கவும், மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் பொதுக்குழு உறுப்பினர்கள் எனக்கு பதவி வழங்கி உள்ளீர்கள். நான் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உழைப்பேன். உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவேன். விரைவில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவேன். அதிமுக-வின் வெற்றிக் கொடியை நாட்டுவேன்.
இது ஒன்று மட்டுமே எனது லட்சியம், கட்சியை அழிக்க நினைப்பவர்கள் காட்சியிலிருந்து வெளியேறலாம், அதிமுக 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. எந்த கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும், அதிமுகவை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது. ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் அதிர்ந்து போகும் அளவிற்கு அதிமுக ஆட்சி செய்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் என்ன திட்டங்கள் வந்துள்ளன.
அவர் முதலமைச்சரானது ஏதோ ஒரு விபத்து. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ள திமுக இதுவரை மக்களுக்காக என்ன திட்டங்களை செய்துள்ளது. மக்கள்தான் என்ன நன்மைகளை சந்தித்தனர்? இப்போது எது கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ ஆனால் தமிழகத்தில் கஞ்சா கிடைக்கிறது.
போதைப்பொருட்கள் டன் கணக்கில் கிடைக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு அன்றாடம் கொலை கொள்ளைகள் நடக்கிறது. மக்கள் குறித்து இதுவரை சிறிதளவும் ஸ்டாலினுக்கு கவலை இல்லை, ஆனால் அவரது குடும்பத்தை குறித்து மட்டுமே அவர் கவலைப்படுகிறார். ஸ்டாலின் குடும்பத்தில் பல முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் கலெக்ஷன், கரப்ஷன் போன்றவற்றை சரியாக செய்து வருகிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரிகள் தடுமாறும் நிலை பார்க்க முடிகிறது. எந்தத் துறையை எடுத்தாலும் அதில் ஊழல் நடக்கிறது. ஏன் திமுகவுக்கு வாக்களித்தோம் என மக்கள் அவதிப்படுகிறார்கள். அவதிப்படும் நேரத்தில் மக்களின் தலையில் பாரத்தை சுமத்தும் வகையில் தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது.
இதோ விரைவில் பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் உயரப்போகிறது. ஒற்றைத் தலைமை வேண்டி பலமுறை பன்னீர்செல்வத்தை மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினார்கள் ஆனால் எத்தனை முறை பேசினாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. இரட்டைத் தலைமையால் கட்சி எவ்வளவு பின்னடைவை சந்தித்தது எவ்வளவு சிரமம் ஏற்பட்டது என்பது தொண்டர்களுக்கும், எனக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.