no national calamity for ogi strom... tamil nadu and kerala
ஒகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னன்தானம் அறிவித்துள்ளார். இது தமிழக, கேரள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் கன்னியாகுமரி உருவான ஒகி புயல் இந்த மாவட்டத்தை பயங்கரமாக தாக்கியது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. 200 க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்ததால் இன்று வரை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கிக்கிடக்கிறது.

குமரி மாவட்டத்தை பதம் பார்த்த ஒகி புயல் கேரளாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகியுள்ளனர். இதனால் ‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசை வலியுறுத்தினார்.

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடந்த நூறாண்டுகளில் இல்லா த அளவுக்கு குமரி மாவட்டம் பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்தார். அதாவது சுனாமியால் ஏற்பட்ட பேரிழப்பை விட அதிக இழப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் மற்றொரு பாஜக அமைச்சரான அல்போன்ஸ் கன்னன்தானம். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என தெரிவித்துள்ளார். நேற்று திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளவாறு ‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றும் தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும் என்றும் கூறினனார்.
‘ஒகி’ புயல் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ததாகவும், அதில் புயல் குறித்து முன்கூட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றும் கூறிய அமைச்சர் அல்போன்ஸ் கன்னன்தானம், புயல் தாக்கிய பிறகு, தேவையான அனைத்து நடவடிக்கையும் மாநில அரசு எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
