“ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை.. எய்ம்ஸ் குழு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !”
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது 3 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார்.
இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது தமிழக அரசு.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது. ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ஆம் முதல் விசாரணையைத் தொடங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது 3 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது திராட்சை, இனிப்புகள், கேக் உள்ளிட்ட பொருள்களை உண்டார் எனவும், தைராய்டு, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் போன்ற பிரச்னைகளால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மருத்துவர் இக்குழு இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாகவும், டிசம்பர் 3ஆம் தேதி அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, டிசம்பர் 4ஆம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்பதான் மருந்துகள் தரப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !