தமிழக மருத்துவர் மீது நம்பிக்கை இல்லை.. எய்ம்ஸ் டாக்டர்கள் வரணும்.. அமலாக்கத்துறை புதிய மனு..!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லம், தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 18 மணிநேரம் நடந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை நேற்று கைது செய்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க கோரி அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லம், தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 18 மணிநேரம் நடந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை நேற்று கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க;- அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி! திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா செந்தில் பாலாஜி? பாஜக
அவரை பரிசோதனை செய்த போது மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை. செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் 3 கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க கோரும் மனுவும், காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்களும் 3.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
- Chennai High Court
- Doctor Suggest Bypass Surgery
- ED Arrested Minister Senthil Balaji
- ED Raid at Senthil Balaji Places
- Enforcement Directorate
- Minsiter Senthil Balaji
- Senthil Balaji Heart attack
- Senthil Balaji News
- Senthil Balaji News Updates
- TN minister Senthil Balaji Health Update
- omandurar Hospital
- AIIMS doctors