அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? மத்திய அரசு மருத்துவர்களின் அறிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை?
நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல என நீதிபதி அல்லி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- அரசியல் சித்து விளையாட்டை தொடங்கிய பாஜக! இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல! திருமா பகீர்..!
இன்னும் சற்று நேரத்தில் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க கோரும் மனுவும், காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.