ஆந்திராவின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடி திட்டங்களை செயல்படத்தி வருகிறார். அதில் முக்கியமான ஒன்று தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவையாகும்.

இதற்காக புதிய சட்ட மசோதா ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும். ஆந்திராவின் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர்  ஜெகன் மோகன் ரெட்டி, ``நம் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல அமைச்சர்கள் சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளனர். 

அவற்றில் எல்.கே.ஜி, யூகே.ஜி வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என அதிரடியாக தெரிவித்தார்.