No chance to cancel farmers loan...Arun Jaitly

விவசாயப் பணிகளுக்காக தேசிய வங்ககளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

மழை பொய்த்துப் போனதையடுத்த நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கு சென்று பல நாட்கள் போராடினார்கள். இதேபோல் மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 5 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

அதே நேரத்தில் மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அப்படி ஒரு யோசனை அரசிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மாநில அரசுகள் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதுஅவர்களது விருப்பம் என்று கூறிய அருண் ஜெட்லி , நிதி பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என தெரிவித்தார்.

.