கேரள மாநிலத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் தங்கள் பள்ளி விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதுவும் நிரப்பாமல்,  இல்லை என்று எழுதி பாரதியின் கனவை நனவாக்கியிருக்கிறார்கள். இந்த தகவலை கேரள மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே 100 சதவீதம் படிப்பறிவு உள்ள மாநிலம் கேரளம். அதே போல முன்னேறிய மாநிலமாகவும் கேரளா விளங்குகிறது. பல புதுமைகளை புகுத்துவதிலும் அம்மாநிலம் சிறப்பாக திகழ்கிறது.

உதாரணமாக தலித்துகளும் அர்ச்சகர்களாகலாம் என்ற சட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நடைமுறைப்படுத்தினார்.

இந்நிலையில் ஜாதி ஒழிப்பில் அம்மாநில மாணவர்கள் புதுமைகளை செய்துள்ளனர். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்மாக பதில் அளித்துள்ள  அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரவீந்திர நாத், கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கூட  விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதுவும் நிரப்பாமல்,  இல்லை என்று எழுதியுள்ளதாக குறிப்புட்டுள்ளார்.

கேரள மாணவர்களின் இந்த செயல் அனைத்துத் தரப்பிலும் பாராட்டுகளை பெற்ற வருகிறது.