Asianet News TamilAsianet News Tamil

இவ்வளவு பேரு செத்தும் புத்தி வரல..? சென்னை வாசிகளே எச்சரிக்கை.. நேற்று மட்டும் 741 பேர் மீது வழக்கு பதிவு.

சென்னை காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும்  741 வழக்குகள் பதியப்பட்டு 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. 

No Awareness after So many people died..? Warned to Chennai residence .. Case registered against 741 people only yesterday.
Author
Chennai, First Published May 6, 2021, 12:45 PM IST

சென்னை காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும்  741 வழக்குகள் பதியப்பட்டு 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது 23 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது, மே 3ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உயர்ந்துள்ளது. 

No Awareness after So many people died..? Warned to Chennai residence .. Case registered against 741 people only yesterday.

எனவே நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, (மே 6ஆம் தேதி) இன்று  அதிகாலை 4 மணி முதல் வரும் 20 ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது போக்குவரத்துக்களிலும் 50 இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. பலசரக்கு கடைகள், மளிகை கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

No Awareness after So many people died..? Warned to Chennai residence .. Case registered against 741 people only yesterday.

இந்நிலையில் சென்னை காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும்  741 வழக்குகள் பதியப்பட்டு 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல்துறை சார்பில் 26 ஆயிரத்து 922 வழக்குகள் பதியப்பட்டு இதுவரை 50 லட்சத்து 86 ஆயிரத்து 800 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நடந்தவர்கள் மீது நேற்று மட்டும் 32 வழக்குகள் பதியப்பட்டு 16 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை மொத்தம் 468 வழக்குகள் பதியப்பட்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. என சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios