Asianet News TamilAsianet News Tamil

அபிநந்தனை சந்தித்த நிர்மலா சீத்தாராமன்... என்ன இருந்தாலும் தமிழ்ப்பற்று சும்மா விடுமா..?

பாகிஸ்தான் பிடியில் இருந்து தாயகம் திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து பேசினார். 

Nirmala Seetharaman met with Abhinanthan
Author
Delhi, First Published Mar 2, 2019, 5:09 PM IST

பாகிஸ்தான் பிடியில் இருந்து தாயகம் திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து பேசினார். Nirmala Seetharaman met with Abhinanthan

டெல்லி அரசு மருத்துவமனையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அபிநந்தனை சந்தித்துப் பேசினார். அப்போது விமானப்படை அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது அபிநந்தனிடம் அவரது உடல்நலம் குறித்து நிர்மலா சீத்தாராமன் விசாரித்தார். அப்போது பாதுகாப்பு அமைச்சர், விமானனப்படை விமானி என்பதையும் தாண்டி, அபிநந்தனை பார்த்து பெருமைப் பட்டுள்ளார் நிர்மலா சீத்தாரமன். அதற்கு காரணம் இருவருமே தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். Nirmala Seetharaman met with Abhinanthan

முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து நேற்று நாடு திரும்பிய அபிநந்தனை இந்திய விமானப் படையின் தலைமை தளபதி சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் நேற்று இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின், இந்திய விமானப் படையின் தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவாவை அபிநந்தன் சந்தித்துப் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.Nirmala Seetharaman met with Abhinanthan

அப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டது குறித்தும், அவர்கள் நடத்திய விதம் தொடர்பாகவும் அபிநந்தன் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. விமானப் படை அதிகாரிகள் விடுதியிலேயே அபிநந்தன் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios