அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திதுப் பேசினார். துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்த நிர்மலா தற்போது கேசிபியை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமத்திய அரசு மறுத்தால், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கை இல்லார் தீர்மானத்தை ஆதரிப்போம் என பேட்டியில் அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி ஓபன் டாக் கொடுத்தார்.

இதையடுத்து கேசிபி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தன்னை நீக்கும் அதிகாரம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் க்கு இல்லை என அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற ஓபிஎ அமைச்சர் சீத்தாராமனை சந்திக்க முயன்றார். ஆனால் அவர் ஓபிஎஸ்ஐ சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என்று அப்போது சொன்ன ஓபிஎஸ், அவரை சந்திக்காமல் திருப்பியதற்கான காரணம் குறித்து கேட்டபோது  எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என சொல்லி சமாளித்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என கூறப்படும் கே.சி.பழனிசாமி, நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப் பேசினார்.

அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து கொடுத்து வாழ்த்து சொன்ன   கே.சி.பழனிசாமி சிறிது நேரம் அமைச்சரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சரை சந்திக்க மறுத்த நிர்மலா சீத்தாராமன், எந்தப் பதவியிலும் இல்லாத கே.சி.பழனிசாமியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கே.சி.பழனிசாமி, அதிமுக விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், அவர் பாஜகவில் இணைவதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான் அமைச்சரை சந்தித்தாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திதுப் பேசினார். துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்த நிர்மலா தற்போது கேசிபியை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.