NIA சோதனை சிறுபான்மை விரோத அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.. பாஜகவுக்கு எதிராக சீறும் ஹ்லான் பாகவி..!

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் நெல்லைமுபாரக், தேசிய செயற்குழு உறுப்பினர் முகமதுபாரூக் உள்ளிட்ட வர்களின் வீடுகளில் இன்று மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ சோதனை நடத்தியிருப்பது சிறுபான்மை விரோத அரசியல்  பழிவாங்கும் நடவடிக்கையே.

NIA raid is an anti-minority political vendetta... Dehlan Baqavi

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனைக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஹ்லான் பாகவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் நெல்லைமுபாரக், தேசிய செயற்குழு உறுப்பினர் முகமதுபாரூக் உள்ளிட்ட வர்களின் வீடுகளில் இன்று மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ சோதனை நடத்தியிருப்பது சிறுபான்மை விரோத அரசியல்  பழிவாங்கும் நடவடிக்கையே.

எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்கும் ஒடுக்குவதற்கும் ED-IT -தேர்தல் கமிஷன்போன்ற ஒன்றிய அரசின் ஏஜென்சிகளை பாஜக பயன்படுத்துவது போன்றே முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மற்றும் தலித்துகள் பழங்குடியினமக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகபோராடும் செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளையும் கட்சிகளையும் ஒடுக்குவதற்கு பாஜக ஒன்றிய அரசின் ஏஜென்சிகளை பயன்படுத்தி வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் எஸ்டிபிஐ கட்சி தலைவர்களுக்கெதிரான என்ஐஏ இந்த நடவடிக்கைகளாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்களுக்காக, நீதிக்காக போராடும் தலைவர்களை ஒருபோதும் முடக்கிவிடாது. ஜனநாயகத்தையும் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை அனைத்து ஜனநாயகசக்திகளும் தலைவர்களும் கண்டிக்க முன்வரவேண்டும் என  ஹ்லான் பாகவி கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios