இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. இதேபோல பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகளும் உள்ளன.

 
இந்நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்தான் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில தேசிய லீக் சார்பாக சென்னை ராயபுரத்தில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.


அப்போது அவர், “கருத்துக்கணிப்புகள் சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி, அதற்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை. கருத்துக்கணிப்புகளை எப்போதும் நம்ப தேவையில்லை. எப்போதுமே மக்களின் கணிப்புதான் உண்மையானது. மத்தியில் நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்சி அமைய போவது உறுதி. இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்தான் வருவார்” என்று உறுதிப்பட ஸ்டாலின் பேசினார்.
பதினேழாவது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆவெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பது நாளை மதியத்தில் தெளிவாக தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.