2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள  நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளன .  இத்தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும்  ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருந்த போதிலிருந்தே அரசியலுக்கு வரப்போகிறார் என  கூறப்பட்டு வந்த நிலையில் இரு தலைவர்களும் மறைந்த நிலையில் அரசியலில் இறங்க அதிக தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் .  அவ்வப்போது தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி வரும் அவர் ,  அதை நிரப்பப் போகும் ஆளுமை தான்தான்  என்ற வகையில் பேசி வருகிறார் . 

அரசியலுக்கு வருவது உறுதி ,  சட்டமன்ற தேர்தலே இலக்கு என வெளிப்படையாக அறிவித்த ரஜினிகாந்த் .  கட்சியின் அடிப்படை  கட்டமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் .  முதலில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில்  எப்பொழுது கட்சியை அறிவிக்கப் போகிறார் என்ற ஏக்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் 2021-ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த  நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது .   அதேநேரத்தில் கூட்டணி குறித்த மறைமுக பேச்சுவார்த்தைகளும் மற்ற கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.   மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் நடந்த வன்முறையடுத்து . 

மத்திய உள்துறை அமைச்சகம் , உளவுத்துறையில் தோல்வியே டெல்லி வன்முறைக்க காரணம் என காட்டமாக பேட்டியளித்தார் ,  மேலும் இந்திய குடியுரிமை  திருத்தச்சட்டம் தொடர்பாக மக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்க தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார் . அதுமட்டுமல்லாமல் முஸ்லீம் அமைப்புகள் மற்றும் மத குருமார்களையும் அவர் அழைத்து பேசி வருகிறார் .  இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி பெயரை அறிவித்து  முதல்கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டி அவர் ஆலோசிக்க உள்ளார் . தொடர்ந்து கட்சி அறிவிப்புக்கான செயல்பாடுகளில் வேகம் எடுக்கும் என கூறப்படுவது.