353 எம்.பி.க்களை கொண்ட கூட்டணியில் தலைமை கட்சியான பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் தேசிய தலைவரும் காந்தி நகரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்க இருப்பதால் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 58 வயதாகும் ஜேகத் பிரகாஷ் எனப்படும் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேசத்தின் மூத்த பாஜக தலைவராவார். இமாச்சலத்தில் அமைச்சராக இருந்த அவர் கடந்த மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். மோடியின் தீவிர விசுவாத்தின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினராவார். 

அமித்ஷா போன்றே செயல்வீரராகவும், மோடியின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாதவராகவும் உள்ள நபரை தேடும் போது கிடைத்தவர் தான் இந்த ஜே.பி.நட்டா. இதனால் மோடியும் நட்டாவை விடாமல் பிடித்து காம்ப்ரமைஸ் செய்து தலைவராக பதவியேற்க வைக்க உள்ளார். தொழில் அதிபராக இருந்த அமித்ஷா, குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். புருஷோத்தபாய் மோடிக்கு வலது கரமாக இருந்து வந்தார். அமித்ஷாவின் வளர்ச்சிக்கு அடுத்து முக்கிய தலைவர்கள் ஒரம்கட்டப்பட்டு, அமித்ஷா மோடியை ஒட்டமொத்தமாக ஆக்கிரமித்து கொண்டார். குஜராத் சட்டமன்ற தேர்தலை தொடங்கி தற்போது மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

  

வாக்கு பதிவின் போது கூட அமித்ஷா வீட்டு பேர பிள்ளைகளை வரழைத்து கொஞ்சு முத்தம் கொடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். இந்த நிலையில் தான் கடந்த 5 வருடங்களாக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா தற்போது உள்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து தேசிய தலைவர் பதவியை ஜே.பி.நட்டா நிர்வகிக்க உள்ளார்.