நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மாற்று பிரதமர் வேட்பாளராக மோடிக்குப் பதில் நிதின்கட்கரியை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு முன்நிறுத்தியது. ஆனால் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து மோடியே மீண்டும் பிரதமராக்கப்பட்டார்.

இதனிடையே காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றிக்காட்டிய அமித்ஷாவுக்கு தற்போது மாஸ் அதிகரித்துள்ளது. அவரது வேகத்தை ஆர்.எஸ்.எஸ், அமைப்பு வெகுவாக பாராட்டி வருகிறது.

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்.சின் குட்புக்கில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை இடத்தில்  இருக்கும் அமித்ஷா தான் மோடியின் பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் நபரா ஆர்.எஸ்.எஸ். தரப்பால் உருவாக்கப்படுகிறார் என பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மோடியின் தளபதியாக விளங்கி வந்த அமித்ஷா, நேரடியா அதிகாரத் தலைமையில் இருந்து வாய்ஸ் கொடுக்கிற அளவுக்கு தன்னை தயார்படுத்திய க கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் கட்டுறதுன்னு பல வேலைத்திட்டங்களை அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எந்த மதமாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற திட்டம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உண்டு. இதே போல் ராமல் கோவில் கட்டுவது என்பதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாள் திட்டம். தற்போது இரு திட்டங்களையும் எப்பாடு பட்டாவது செய்லபடுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமித்ஷாவுக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.