அண்மையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆன்மீக பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள் தான் கொன்று புதைத்தோம் என்று பேசிய சீமானையும் அவரது கூட்டத்தையும் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் நெல்லை கண்ணனை கைது செய்த தமிழக போலீஸ் ஏன்  சீமானை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் அண்ணன் கே.எஸ்.அழகிரியை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இதே போல் ராமலிங்கத்தை கொலை செய்த கூட்டத்தின் நடுவில், அவர்கள் போடும் பிரியாணிக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் வேல் முருகனுக்கு என்னைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

சீமான், வேல்முருகன் என்ற இந்த இரண்டு வன்முறையாளர்களில் யாரை முதலில் தூக்குவது என்று லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறேன் என்று அதிரடியாக தெரிவித்தார்.

புராண காலத்தில் இருந்து கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அப்போதெல்லாம் ஆணவக் கொலைகள் நடந்ததுண்டா ? என் கேள்வி எழுப்பிய எச்.ராஜா, என்றைக்கு திருமாவளவன் சரக்கு, மிடுக்கு என்று பேசினாரோ அன்றிலிருந்ததான் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் பெருகிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

வன்னிய குலஷத்திரியர்கள் தெய்வமான திரௌபதி படம் கண்டிப்பாக தமிழகத்தில் ரிலீஸ் ஆகியே தீரும் என்றும் எச்.ராஜா அதிரடியாக தெரிவித்தார்.