Asianet News TamilAsianet News Tamil

அப்போ அது பொய்யா கோபால்... விஜய் அரசியல் கட்சி தொடங்கிய செய்தி... வதந்தி உண்மையாகுமா..?

உண்மைக்கு விளக்கம் குடுத்தா அது தெளிவு ஆகும். வதந்திக்கு விளக்கம் குடுத்தா அது உண்மை ஆகிடும் என விஜய் கத்தி இசை வெலியீட்டு விழாவில் பேசியது தான் தற்போது நியாபகத்துக்கு வருகிறது. 

News started by Vijay Political Party ... Is the rumor true ..?
Author
Tamil Nadu, First Published Nov 5, 2020, 6:11 PM IST

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என விஜயின் பி.ஆர்.ஓ ரியாஸ் கே அஹமது விளக்கம் அளித்துள்ளார். இதனை நெட்டிசன்கள், ‘’தன் ரசிகர்களுக்கு ஓட்டு போடும் வயது ஆகவில்லை என்பதை அறிந்து கட்சி குறித்த அறிவிப்பை தள்ளி வைத்தார் விஜய்’’எனக் கிண்டலடித்து வருகின்றனர்.   News started by Vijay Political Party ... Is the rumor true ..?

விஜய்யின் தந்தை  எஸ்.ஏ.சி... விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில், அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் தளபதி விஜய் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில், விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம் விஜய் அரசியலில் நுழைய ஆயத்தம் ஆகிவிட்டாரா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீர் என விஜய், திருச்சி தெற்கு, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. News started by Vijay Political Party ... Is the rumor true ..?

​இந்நிலையில், இதுநாள் வரை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருந்த அமைப்பு, தற்போது கட்சியாக மாறியுள்ளது என்றும், கட்சியின் பெயரை, நடிகர் விஜய் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளாகவும் இணையத்தில் செய்தி பரவியது. அதே போல், கட்சி தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்தக் தகவல் பொய்யானது என விஜயின் பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார்.

உண்மைக்கு விளக்கம் குடுத்தா அது தெளிவு ஆகும். வதந்திக்கு விளக்கம் குடுத்தா அது உண்மை ஆகிடும் என விஜய் கத்தி இசை வெலியீட்டு விழாவில் பேசியது தான் தற்போது நியாபகத்துக்கு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios