உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில்   நியூயார்க்  மருத்துவமனையில் கொரனா நோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இச் சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரஸின் தாக்கம்  மிகத் தீவிரமாக உள்ளது.  அமெரிக்காவில் இந்த வைரசால் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது .   இந்நிலையில் நியூயார்க் பிரெஸ்பைரின் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரின் என்ற பெண் மருத்துவர் தமது கண் முன்பே கொரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணம் அடைவதை தாங்கமுடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், 

மருத்துவர் லோர்னா பிரின் ஞாயிற்றுக்கிழமை தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது  தந்தை டாக்டர் பிலிப் பிரின் நியூயார்க் டைம்ஸில் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார் ,  முன்னதாக நோயாளிகள் அதிக அளவில் உயிரிழந்ததை தாங்கமுடியாமல் லோர்னா பிரின் மருத்துவமனையில் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் உடனே அவரது வேதனையை புரிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டுக்கு செல்லுமாறு கூறி அவரை வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தது , இந்நிலையில்  தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவர் இருந்து வந்தார் ,  ஆனாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் யாருடனும் சரியாக பேசாமல் இருந்ததாக தெரிகிறது .  இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .  இதனால் நியுயார்க் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .  அதுமட்டுமல்லாமல் நியூயார்க் மருத்துவமனைகளில்  மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது அங்கு இருக்கிற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக கூறுகின்றனர். 

கொரோனா பீதி ஒரு சவால் என்றால் மனரீதியாக பிரச்சனைகளில்  இருந்து மீண்டுவருவது பெரும் சவாலாக உள்ளது என்கின்றனர் சக மருத்துவர்கள்.   இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவரை பிரினை ஹூரோவாக கொண்டாடுங்கள் என அவரது தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் ,  மற்றவர்களுக்கு மரணம் நேர்ந்தது போல தன் மகளுக்கும் அது நேரிட்டது என தெரிவித்துள்ள அவர் உண்மையிலேயே என் மகள் கொரொனாவானவை தடுப்பதில் முன்னணி தளபதியாக இருந்தார் ,  அவள் தன் வேலையைச் செய்ய முயன்றாள் ஆனால் அது அவளை கொன்றது என கூறியுள்ளார். கொரோனா அவசரகால மருத்துவர்கள் மற்றும் அவர்களுடன் பணியில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா மரணங்கள் மனம் சார்ந்த  சவால்களை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.