துக்ளக் பத்திரிக்கையை மறைந்த நடிகர் சோ ராமசாமி  தொடங்கி நடத்தி வந்தார். அரசியல் நையாண்டிக்காகவே அந்தப் பத்திரிக்கை சில காலம் பரபரப்பாக விற்பனை ஆனது.

இந்நிலையில் துக்ளக் ஆசிரியரான சோ ராமசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அரசியல் விமர்சகரும், பாஜகவில் செல்வாக்கு பெற்றவருமான குருமூர்த்தி துக்ளக் பத்திரிக்கைக்கு  ஆசிரியரானார்.

இந்நிலையில் குருமூர்த்தியும்  நடிகர் எஸ்,வி,சேகரும் இணைந்து “ சோழி “ என்ற வார இதழைத் தொடங்குகின்றனர். மறைந்த சோ ராமசாமியின்  CHO  என்ற எழுத்தை மையமாக வைத்து இந்த இதழ் தொடங்கப்படுகிறது.

“ சோழி “ பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வார இதழாக வெளிவர உள்ளது. இந்த இதழின் ஆசிரியர் மற்றும்  வெளியீட்டாளராக எஸ்.வி.சேகர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.