9 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முறியடிக்க இன்று முதல் தமிழகம் முழுவதும் புதிய ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர். ஆசிரியர்கள் இன்றி, பூட்டப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, கடந்த 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தீவிரமாக தொடர்வதால், அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளில், கல்வி கற்பித்தல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், பள்ளிகளில் பொது தேர்வு, செய்முறை தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முடங்கியுள்ளன. ஆசிரியர்கள் வராததால், தொடக்கப் பள்ளிகள், செயல்படாமல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலைமையை சமாளிக்க, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில், அரசு முழுவீச்சில் ஈடுபட்டுஉள்ளது.ஆசிரியர் வேலையை பெற, முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் அலுவலகங்களில், ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விடுமுறை நாளான நேற்றும்,ஏராளமானோர் விண்ணப்பங்களை ஆர்வமுடன் சமர்ப்பித் தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள், இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என, அரசு இறுதி கெடு விடுத்துள்ளது. இந்நிலையில் தொகுப்பூதியத்தில் பணியமர்ந்ததப்பட்ட ஆசிரியர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இன்று பணிக்கு சேருகின்றனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் இன்றி, கிராமப்புறங்களில் பூட்டிக் கிடந்த பள்ளிகள் திறக்கப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு பாடம் நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 28, 2019, 6:19 AM IST