காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது, அதன் திறப்பு விழா டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், மத்திய டெல்லியில் அமைந்துள்ள கோட்லா சாலையில் எண் 4ல் காங்கிரஸ் கட்சிக்கு புது அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட டிசம்பர் 28-ம் தேதி இது திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்திராகாந்தி பவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.