மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார்.அம்மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.இந்த நிலையில் புதிய அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
T.Balamurukan

கொரோனா பாதிப்பு காரணமாக அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளையும் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் சிவராஜ்சிங் சவுகான் அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.
கொரோனா பாதிப்பு மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. மாநில அரசு முழுமையாக செயல்படவில்லை. மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. போபாலில் நடைபெற்ற விழாவில் பா.ஜனதா தலைவர்கள் நரோட்டம் மிஸ்ரா, கமல் படேல், மீனா சிங், துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 21, 2020, 10:20 PM IST