தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க தமிழக அரசு முடிவு..! சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள்..
தமிழக சட்டப்பேரவையில் வனம்,சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளிட்டார்.
சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டார்,
1, திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக மாற்ற ரூபாயை 7.5 கோடி ஒதுக்கீடு செய்து வரும்.
2, கிராமந்தோறும் மரகத பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில்
ரூபாய் 25கோடி செலவில் உருவாக்கப்படும்.
3, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
4, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு
ரூபாய் 5 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .
5, தமிழ்நாடு அரசு வனத் துறையின் முன்னோடி முயற்சியாக, கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார இரு சக்கர வாகனங்களை கொள்முதல் செய்து வழங்க உள்ளது.
6, மன்னார் வளைகுடாவில் 3.6 ஹெக்டர் பரப்பளவில் பவளப் பாறைகளின் மீளுருவாக்கப் பணிக்காக 3.6 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் அரசால் மேற்கொள்ளப்படும்.
7, சென்னையில் ரூபாய் 6.3 கோடி செலவில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
8, அடையாறு கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமை பரப்பை அதிகரிக்க 3.42 கோடி மரக்கன்றுகள் ரூபாய் 237 கோடி செலவில் பசுமை தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
9, சூழல் சுற்றுலா சுற்றுலா தலங்கள் புதிதாக, ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூபாய் 14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
10, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ரூபாய் 3.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
11, வனப்பகுதியில் உள்ள அன்னியகளைத் தாவர இனங்கள் அகற்ற இந்த ஆண்டிற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12, வனத்துறையின் மேலாண்மையை செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.
13, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சோலைகாடுகள் பாதுகாப்பு மையம் சுமார் 116 ஹெக்டர் பரப்பளவு, ரூ5.2 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.
என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக புதிய 21 அறிவிப்புகள் பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்
1, தமிழ்நாட்டில் 10 இடங்களில் 3000 லட்சம் மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
2, புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 770 லட்சம் செலவில் செயற்கை இழை தடகள ஓடு பாதை அமைக்கப்படும்.
3, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 770 லட்சம் செலவில் செயற்கை இழை தடகள ஓடு பாதை அமைக்கப்படும்.
4, கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் ரூபாய் 550. 55 லட்சம் செலவில் சர்வதேச தரத்திலான பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
5, தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சியாளர்களை கொண்டு ரூபாய் 500 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.
6, மாநில விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியினை ரூபாய் 331 லட்சத்திலிருந்து 400 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
7, சென்னையில் இளைஞர்களின் குத்துச்சண்டை ஆர்வத்தை ஊக்குவிக்க ரூபாய் 200 லட்சம் செலவில் மற்றொரு குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும்.
8, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் அனைத்து விளையாட்டு விடுதிகளிலும் ஒரே வகையான விளையாட்டு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூபாய் 176.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
9, வேலூர் காட்பாடியில் ரூபாய் 69 லட்சம் செலவில் கல்லூரி மாணவியருக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி அமைக்கப்படும்.
10, விளையாட்டு வீரர்கள் நல நிதிக்கான நிதிய மூலதனத்தை ரூபாய் 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும்.
11, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் வாழும் மக்களிடையே சிறப்பு உலகத் திறனாளர்கள் கண்டறியும் போட்டிகள் நடத்தப்பட்டு அம்மாணாக்கர்களுக்கு விடுதிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்தல் மற்றும் பரமக்குடியில் ரூபாய் 50 லட்சம் செலவில் பளுதூக்குதல் பயிற்சி அளிக்கப்படும்.
12, அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையினை ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து 38லட்சமாக உயர்த்தி புதிய பொலிவுடன் நடத்தப்படும்.
13, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழைவாழ் மாணவ, மாணவர்களின் விளையாட்டு மற்றும் திறனை, மேம்படுத்திட தினசரி பயிற்சி திட்டம் ரூபாய் 25 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
14, தர்மபுரி மாவட்டம் சித்தேரி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களிடையே சிறப்பு உலக திறனாளர்கள் கண்டறியும் போட்டிகள் ரூபாய் 25 லட்சம் செலவில் நடத்தப்படும்.
15. விருதுநகர் மாவட்டத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 25.00 லட்சம் செலவில் மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பு உலகத் திரணாளர்கள் கண்டறியும் போட்டிகள் நடத்தப்பட்டு அம்மாணவர்களுக்கு விடுதிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
16. புதுக்கோட்டை, திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்ககளுக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் சூட்டப்படும்.
17. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் திறனை மேம்படுத்தி மின்னணு ஆளுமை முறைகள் செயல்படுத்தப்படும்
18. நலிந்த நிலையிலுள்ள விளையாடு வீரட்களுக்கு தற்போது வழங்கி வரும் ஓய்வூதியம் ரூ 3000 த்திலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
19. தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தற்போது இருக்கும் 1 மணி நேர சிற்றுண்டி படித்தொகையை ரூபாய் 10 ல் இருந்து ரூபாய் 15 ஆக உயர்த்தப்படும்
20. தேசிய சரவதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்க்கும் வகையில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 50 மீ தடுப்பு துப்பாக்கி சூடு வரம்பு கட்டுமானம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக வளாகத்தில் ரூபாய் 110.00 லட்சம் செலவில் அமைக்கப்படும்
21. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 3 இளங்கலை பாடத்திடத்திற்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டடங்கள் ரூபாய் 583.50 லட்சம் கட்டப்படும்
இதையும் படியுங்கள்