திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக அவ்வப்போது உடல்நலம் குறைவதும் பின்னர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெறுவதும் வழக்கமாக இருந்து வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார்.

ஆனால் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக அவரது உடல்நிலை வழக்கத்தை விட சற்று மோசமடைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் ஆகியோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்தனர். ஸ்டாலினிடமும் மருத்துவர்களிடமும் உடல்நிலை குறித்து விசாரித்தனர். இதையடுத்து இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், கருணாநிதி உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என திமுக தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் மருத்துவமனை வாயிலில் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியில் திரண்டுள்ளனர்.

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் அனைவரும் விரும்பும் வேளையில், அவர் நலமாகத்தான் இருப்பார்; அவருடன் போராடும் இயற்கையை வென்றுவிடுவார் என்பதை உணர்த்தும் வகையில் டுவிட்டரில் திமுக தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

திமுக தொண்டர் ஒருவரின் டுவிட்டர் பதிவில், எத்தனை முறைதான் மண்டியிடுவாய்.. ஏய் வெட்கங்கெட்ட மரணமே.. போய் வேற இடத்த பாரு என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அந்த எமனை கொஞ்சம்
ஓய்வுஎடுக்க சொல்லுங்க

எப்பா நீ போய்ட்டு இன்னும்
5 வருடம் களித்துவா

அப்பயும் நாங்க சொன்னாதான்#பொன்விழாத்தலைவர்கலைஞர் #கலைஞர் #கருணாநிதி #KarunanidhiHealth #Kalaignar

ஒன்ன அவளவு சீக்கிரம்
உட்டுரோவமா

I❤️கிலவா pic.twitter.com/7cSaYTBeD2
— Murali Sudha DMK (@DmkSudha) July 30, 2018

மற்றொருவரின் டுவிட்டர் பதிவில், வதந்திகளுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு குமரிக்கடல் வள்ளுவனை போல கம்பீரமாய் நிற்கிறார் கலைஞர் என பதிவிட்டுள்ளார்.

வதந்திகளுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு குமரிக்கடல் வள்ளுவனை போல கம்பீரமாய் நிற்கிறார் கலைஞர்.#GetWellSoonKalaignar #கலைஞர் #கருணாநிதி
— Murali sai (@emurali39) July 30, 2018