நீட் தேர்வு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கூட தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் ஆனால் தற்போது

மத்திய அரசின் தயவிலே, மண்டியிட்டு சரணடைந்து இருக்கிற ஆட்சியாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

.அப்போது பேசிய அவர், கல்விக்கு இன்று எப்படிப்பட்ட சோதனை வந்திருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். நீட் தேர்வினால் ஏழை-எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் எப்படிப்பட்ட கொடுமையில் சிக்கி தவிக்கிறார்கள் என்று பார்க்கிறோம். அதற்காக நாம் குரல் கொடுக்கிறோம். சட்டமன்றத்தில் 2 மசோதாக்களை கொண்டு வந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

நீட் தேர்வு பிரச்சினையில் கூட மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக  இருந்த போது தடுத்து நிறுத்தினார். அப்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு நீட் தேர்வு கொண்டு வர முயற்சித்தது உண்மை. அதை மறுக்கவில்லை. ஆனால் தடுத்தது அன்றைக்கு இருந்த தி.மு.க. என்பதை யாரும் மறந்துவிட முடியாது என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு திமுக  ஆட்சியில் இருந்தவரை தடுத்து நிறுத்தப்பட்டது என்று தெரிவித்த ஸ்டாலின்  ஜெயலலிதா இருந்தவரை கூட தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் கூறினார்.

ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு மத்திய அரசின் தயவிலே, மண்டியிட்டு சரணடைந்து இருக்கிற ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.