13 மாணவர்களின் மரணம் குறித்து ஆவேசமாக பேசிய முதலமைச்சர் எடப்பாடியார் அதற்கு காரணமான பாஜகவின் மத்திய அரசு குறித்து ஒருவார்த்தை கூட சுட்டிக்காட்டவில்லை என சிபிஎம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போதுதான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் காரணமாக, தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு பயத்தால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என முதல்வர் ஆவேசமாக பேசினார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க;- நீட்டால் 13 மாணவர்களை கொன்றது திமுக தான்”... முதல்வரின் கோவத்தை பார்த்து மிரண்டு போன ஸ்டாலின்...!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 13 மாணவர்களின் மரணம் குறித்து ஆவேசமாக பேசிய முதலமைச்சர் எடப்பாடியார் அதற்கு காரணமான பாஜகவின் மத்திய அரசு குறித்து ஒருவார்த்தை கூட சுட்டிக்காட்டவில்லை. ஏதுமறியாத குழந்தைகளின் மரணத்தில் துளியளவு கூட மனிதநேயமே இல்லாமல் அவர் அரசியலாக விளாசித் தள்ளியிருப்பது நாளேடுகளுக்கும் ஊடகங்களுக்கும் தலைப்புச் செய்தியை தந்திருக்கலாம். ஆனால், காலம் அப்படியே அந்த நிமிடத்தோடு உறைந்து நின்று விடாது. 

இந்த சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர். நாளை என்ற ஒன்று வரும். அந்த நாளையில் எடப்பாடியார் அவர்கள் எம்எல்ஏ ஆகக்கூட இருக்கமாட்டார் என  சிபிஎம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி விளாசி தள்ளியுள்ளார்.