NEET:தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த பட்டியலின மாணவர்.. கருணை அடிப்படையில் மார்க்: நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த பட்டியலின மாணவருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEET: Dalit student who avoided answering the wrong question.. Mark on compassionate grounds: Court order

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த பட்டியலின மாணவருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் பங்கேற்றார். அப்போது தவறான கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார், அந்தத் தேர்வில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 93 மதிப்பெண் கட் ஆப்  என நிர்ணயிக்கப்பட்டது.  இந்நிலையில் உதயகுமார் 92 மதிப்பெண்கள் வரை எடுத்தார். அவர் அளிக்காமல் விட்ட அந்த தவறான கேள்விக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முதமைக்கும் மனு அளித்தார்.

NEET: Dalit student who avoided answering the wrong question.. Mark on compassionate grounds: Court order

இதையும் படியுங்கள்: முதல்வரே சொன்னிங்களே செய்தீர்களா.? அண்ணாமலை பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய். சீமான்.

ஆனால் அவரது கோரிக்கை மனு பரிசீலிக்கப்படவில்லை,  இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு விசாரணையின் போது அந்த தவறான கேள்வியை அவர் அப்படியே தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை அடிப்படையில் மனு அளிக்கப்பட்டு இருக்கும் என தேசிய முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விதியை எதிர்த்து புதிதாக வழக்கு தொடர அனுமதி கோராமல் வழக்கை திரும்ப பெற்றதுடன், மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டது.  அதை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்ட 3 தாசில்தார்கள் மீது நடவடிக்கை.. தமிழக அரசு ஆக்ஷன்

 

NEET: Dalit student who avoided answering the wrong question.. Mark on compassionate grounds: Court order

அந்த உத்தரவை எதிர்த்து மாணவர் தரப்பில்  மேல் முறையீடு  செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ண குமார் அமர்வு தாழ்த்தப்பட்ட , பழங்குடியின விளிம்புநிலை  மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை அடிப்படையில் 4 மதிப்பெண்கள் வழங்க  உத்தரவிட்டனர். திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் மாணவருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை முன்னுதாரணமாக கருதக்கூடாது என்றும் தெரிவித்தனர்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios