நீதிபதிகள் மீதே அவதூறு.. யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுங்க.. டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

நீதிபதிகள், அரசியல் அமைப்பு பிரதிநிதிகள் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை, நேர்காணல்களை வெளியீடும் யூட்யூப் சைனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Defamation of judges.. Take action against YouTube channels.. Madras High Court orders DGP.

நீதிபதிகள், அரசியல் அமைப்பு பிரதிநிதிகள் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை, நேர்காணல்களை வெளியீடும் யூட்யூப் சைனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும்  நீதிபதிக்கு  எதிராக சமூக வலைதளம் மற்றும் யூடியூப் சேனல்களில் கருத்து வெளியிடப்பட்டது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Defamation of judges.. Take action against YouTube channels.. Madras High Court orders DGP.

சமீபகாலமாக யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யூட்டியூப் ஆர்வமுள்ளவர்கள் யூடியூப் சேனல்களை தொடங்கி அதில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் பலர் யூடியூப் சேனல்கள் தொடங்கி பலரை பேட்டி கண்டு அவற்றை பதிவேற்றி வருகின்றனர்.

இதே நேரத்தில் சில யூடியூப் சேனல்கள் வரைமுறையின்றி செயல்படுவதாக கூறி, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கையில் அரசு மற்றும் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக யூடியூம் ஒன்றில் கருத்து வெளியிடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள்: என் சம்பளம் அதிகமாயிடுச்சி, வரதட்சணையும் அதிகமா வாங்கிட்டு வா.! சாப்ட்வேர் என்ஜினியர் மனைவிக்கு டார்ச்சர்

அந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் யூட்யூப் சேனல்களில் அவதூறு கருத்துக்களை பரப்ப நேர்காணல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கில் டிஜிபியை  தாமாகவே முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்த அவர், அவதூறு கருத்துக்களை யூடியூப் சேனல்கள் மூலம் வெளியிட்டுவருபவர்கள் கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்க உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: போலீஸ் இன்பார்மர் என நினைத்து பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது டிஜிபி தரப்பில் எல்காட் எனப்படும் தமிழ்நாடு எலக்ட்ரானிக்கல் கார்ப்பரேஷன் மூலம் 22 கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பில் நவீன சைபர் கருவிகளை வாங்க தமிழக அரசிடம் முன்மொழிந்துள்ளதாகவும், எனவே இந்த கருவிகளை வாங்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Defamation of judges.. Take action against YouTube channels.. Madras High Court orders DGP.

இதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் அரசியலமைப்பு சட்ட  பிரதிநிதிகள் நீதிபதிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஒருவர் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது. அப்படி ஆதாரமின்றி அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒவ்வொருவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உள்ளது. ஆனால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

மலிவான விளம்பரத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும், இல்லையென்றால் காளான் போல பரவி விடுவார்கள். சமூக அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, சமூக ஒழுங்கை பராமரிக்க நீதித்துறை அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios