NEET centre could not be change -suprecourt judugement

மத்திய அரசு மருத்துவகல்விக்காக அனைத்து மாநிலத்திலும் நீட் தேர்வை கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கியது. இதனால் ஏழை எளிய கிராமத்து மாணவர்கள் பெரும் இக்கட்டுக்குள் ஆளானார்கள்.

அதன்படி வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கான மையங்கள் வெளி மாநிலங்களில் போடப்பட்டுள்ளன இதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போடப்பட்டது

இதற்கு மதுரை உச்சநீதிமன்ற கிளை தமிழக மாணவர்களுக்கு தேர்வெழுத தமிழகத்திலே மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அதனை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு மனு இன்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது, அதன்படி வெளிமாநிலங்களில் மையம் போடப்பட்ட மாணவர்கள் வெளிமாநிலத்தில் தான் எழுதவேண்டும் இனி வரும் வருடங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு அந்தந்த மாநிலத்தில் மையங்கள் போடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.