காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தமிழகம் முழுவதும் திடீர் திடீரென நினைத்த நேரத்தில் போராட்டத்தில் குதித்துள்ளதால், தமிழகமே போராட்டத்தால் ஸ்தம்பித்துள்ளது. போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசியுள்ளனர்.

இதில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புக்கு முன்பே அதாவது கடந்த வாரமே தலைமைச் செயலகத்தில் நேற்று காலையில் காவல் துறைத் தலைவரை அழைத்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழகத்தில் நடக்கும் போராட்டம் குறித்து விளக்கமாக பேசினார்களாம் அப்போது ‘எதிர்க்கட்சிகள் நடத்திக்கிட்டிருக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை.

தமிழர்களின் உரிமைக்கான இவர்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் உடனே கொடுத்துடுங்க. அனுமதி கேட்காமல் போராட்டத்தில் குதிச்சாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். நீங்க எதுவும் செய்திட வேண்டாம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் தடியடி நடத்திக் கலைச்சுட்டாங்கன்னு எங்கேயும் யாரும் சொல்லிடக் கூடாது. அதனால் போராட்டம் நடத்துறவங்களுக்குத் தேவையான பாதுகாப்பை மட்டும் கொடுங்க. தெரிந்தோ தெரியாமலோ கூட கைவச்சிடாதிங்க அப்புறம் பெரிய தலைவலியா மாறிடும்.

அதேபோல கைது செய்யும் சூழல் வந்தாலும் கண்ணியத்துடன் கைது பண்ணுங்க. எதிர்க்கட்சிகளைத் தவிர, சில இடங்களில் பொதுமக்களோ, மாணவர்களோகூட போராட்டத்தில் ஈடுபடலாம். எங்கேயும் யாரையும் நீங்க தடுக்க வேண்டாம். தடியை கையில் எடுக்கவும் வேண்டாம்’ என்று முதல்வர் சொன்னாராம் எடப்படியார்.

எடப்பாடியாரின் இந்த அதிரடியான உத்தரவால் தான் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கடுமை காட்டவில்லை, ஆனால்

இன்று அண்ணா சாலையில் மு.க.ஸ்டாலினும் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றதால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் காமராஜர் சாலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து உழைப்பாளர் சிலை அருகே தரையில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலினை குண்டு கட்டாக போலீஸ் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  என்னதான் நடந்தாலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காத அளவிற்க்கு கைது நடவடிக்கை இருக்கவேண்டும் என்பது தான் எடப்பாடியாரின் உத்தரவு ஆனால் இன்று நடந்த போராட்டம் வேறுவடிவம் எடுத்தது.

இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்குப் பின் செய்தியாளர்களிடம் ஸ்டாலின், மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.  காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஆளும் தரப்பை நடுங்கவைதுள்ளார். மேலும் ஒரே நேரத்தில்  தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது  நடவடிக்கை நடந்துள்ளதால் அழும் தரப்பின் ஒட்டுமொத்தத் கவனமும் நாளை நடக்கும் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தின் மீதே திரும்பியுள்ளது.